UPDATED : நவ 07, 2026 12:00 AM
ADDED : நவ 06, 2026 11:36 PM

அ நிறம் | அளவு
கோவை: நேரு ஸ்டேடியம் எதிரே ரூ.49.69 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட செயற்கை புல் தரையுடன் கூடிய பாக்ஸ் கிரிக்கெட் மைதானத்தை (கிரிக்கெட் டர்ப்) பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் திறந்து வைத்தார்.
மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பொதுமக்கள் டர்ப் டவுன் செயலி வாயிலாக காலை 7:00 முதல் இரவு 8:00 மணி வரை விளையாடுவதற்கு முன்பதிவு செய்யலாம்.
ஒரு மணி நேரத்திற்கு ரூ.800 கட்டணத்துடன், ஜி.எஸ்.டி., சேர்த்து ரூ.864 செலுத்தி மைதானத்தை பயன்படுத்தலாம்' என்றனர்.
