ADDED : ஜன 15, 2026 05:07 AM
அ நிறம் | அளவு
காந்திபுரம்: ராமநாதபுரம் ஒலம்பஸ், பாரதி நகரை சேர்ந்தவர் ரமேஷ், 43. இவரது மகன், ஜெகன், 17. காந்திபுரத்தில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பிளஸ் 2 தேர்வுக்காக பயிற்சி எடுத்து வந்தார். கடந்த 7ம் தேதி வெளியில் செல்வதாக கூறி சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்றார்.
காந்திபுரம் மேம்பாலத்தின் மீது ஏறிய அவர், காந்திபுரம் சிக்னல் அருகே சென்றதும் மேம்பாலத்திலிருந்து கீழே குதித்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று உயிரிழந்தார். காட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
