/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொலை வழக்கில் சிறுவனுக்கு சிறை
/
கொலை வழக்கில் சிறுவனுக்கு சிறை
ADDED : மே 02, 2025 07:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை, வெள்ளலுார் பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன், 23; இளம்பெண் ஒருவருடன் நெருங்கி பழகினார். அதே பகுதியில் வசிக்கும் சுரேந்திரன்,21, ஜெயராஜ்,22, அபிவிஷ்ணு,25, கார்த்திக்,23, மற்றும், 16 வயது சிறுவன் உட்பட ஐந்து பேர் சேர்ந்து, தட்டிக்கேட்ட போது, தகராறு ஏற்பட்டது. இதில், ஐந்து பேரும் சேர்ந்து தாக்கியதில், ஜெயச்சந்திரன் உயிரிழந்தார்.
போத்தனுார் போலீசார் ஐந்து பேரையும் கைது செய்தனர். கோவை சிறார் நீதிமன்றத்தில் விசாரித்த நீதிபதி, அச்சிறுவன் மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டதால், மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

