/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருட்டு வழக்கில் சிறுவனுக்கு சிறை
/
திருட்டு வழக்கில் சிறுவனுக்கு சிறை
ADDED : நவ 20, 2025 02:23 AM
- நமது நிருபர் -: உடுமலை பஸ் ஸ்டாண்டில் துாங்கி கொண்டிருந்தவரிடம், பணம் திருடிய வழக்கில், -தொடர்புடைய சிறுவனுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
உடுமலை உழவர் சந்தை பகுதியை சேர்ந்தவர் அப்துல்கலாம், 23. இவர் கடந்தாண்டு மே, 25ம் தேதி இரவு உடுமலை பஸ் ஸ்டாண்டில் துாங்கி கொண்டிருந்தார்.
அவர் அசந்திருந்த போது, அங்கு வந்த மூன்று பேர் அப்துல்கலாமை எழுப்பி, மிரட்டி தாக்கினர். அவரிடமிருந்த மொபைல் போன், 10,500 ரூபாயை பறித்து கொண்டு தப்பினர். இது குறித்து, உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, 16 வயது சிறுவன் ஒருவன் உள்பட மூன்று பேரை கைது செய்தனர்.
சிறுவன் செங்கல்பட்டு அரசு சிறப்பு இல்லத்தில் சேர்க்கப்பட்டார். இவ்வழக்கு விசாரணை திருப்பூர் இளம் சிறார் நீதி குழுமத்தில் நடைபெற்று வந்தது.
இதில், 16 வயது சிறுவனுக்கு ஓராண்டு, செங்கல்பட்டு அரசினர் சிறப்பு இல்லத்தில் தங்க வைக்கவும், போதை மறுவாழ்வு பெறும் வகையில் சிகிச்சை வழங்கவும் நீதிபதி செந்தில்ராஜா, உறுப்பினர்கள் முருகேசன், மல்லிகா ஆகியோர் உத்தரவிட்டனர்.

