ADDED : டிச 07, 2025 05:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை: வால்பாறை அருகே சிறுத்தை தாக்கியதில் சிறுவன் உயிரிழந்தான்.
கோவை மாவட்டம், வால்பாறை அருகே, பாரி அக்ரோ நிறுவனத்திற்கு சொந்தமான ஐயர்பாடி தேயிலை தோட்டத்தில், நான்கு வீடுகளை கொண்ட தொழிலாளர் குடியிருப்பில், ஒரு வீட்டில் அசாம் மாநிலத்தை சேர்ந்த, ரோஜாவெல்லி என்பவர் குடும்பத்துடன் வசிக்கிறார்.
நேற்று இரவு, 7:15 மணிக்கு, அவரது மூன்று பிள்ளைகள் வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த வந்த சிறுத்தை, ஐந்து வயதான சைபுல்ஆலமை தாக்கி, செடி கொடிகளுக்குள் இழுத்து சென்றது.
விரைந்து வந்த வனக்குழு, ஒரு மணி நேர தேடலுக்கு பின், சிறுவனின் உடலை தேயிலை தோட்டத்தில் இருந்து மீட்டனர்.

