/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜாக்குவார், ஹாக் போர் விமான உதிரிபாகம் தயாரிக்கலாம்! கோவை குறு தொழில் நிறுவனங்களுக்கு வாய்ப்பு
/
ஜாக்குவார், ஹாக் போர் விமான உதிரிபாகம் தயாரிக்கலாம்! கோவை குறு தொழில் நிறுவனங்களுக்கு வாய்ப்பு
ஜாக்குவார், ஹாக் போர் விமான உதிரிபாகம் தயாரிக்கலாம்! கோவை குறு தொழில் நிறுவனங்களுக்கு வாய்ப்பு
ஜாக்குவார், ஹாக் போர் விமான உதிரிபாகம் தயாரிக்கலாம்! கோவை குறு தொழில் நிறுவனங்களுக்கு வாய்ப்பு
ADDED : டிச 06, 2025 09:40 AM

கோவை: தென்னிந்திய பாதுகாப்பு தளவாட உபகரண வினியோகஸ்தர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் சங்கம் (சிடா) சார்பில், பாதுகாப்பு தளவாட உற்பத்திக் கண்காட்சி, கோவை ஈச்சனாரி, ரத்தினம் கிராண்ட் ஹாலில் நடக்கிறது.
கண்காட்சியில், ராணுவம் சார்ந்த அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இதில், குண்டு துளைக்காத கவச உடை முதல் போர் விமானத்தின் உதிரி பாகங்கள் வரை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கான வழிமுறைகள், டெண்டரில் பங்கேற்பது, தரச்சான்று என அனைத்து வகையான வழிகாட்டுதல்களும் கண்காட்சியில் வழங்கப்படுகின்றன.
ரயில்வே பிரேக் சீல், எலாஸ்டேமெரிக் பேட், ரயில்வே பேரிங் சீல், லேட்டரல் பம்ப் ஸ்டாப் என பல நூற்றுக்கணக்கான உதிரிபாகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
விமானப்படை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியில், கர்நாடக பிடார் விமானப்படைத்தளத்தில் உள்ள ஜாகுவார், ஹாக் போர் விமானங்களுக்கான டயாப்ரம்; பிளாட்டஸ் பி.சி.,7 எம்.கே.,2 பயிற்சி விமானத்துக்கான லேண்டிங் லைட் அசெம்பிளி; ஹெச்.எஸ் 748 அவ்ரோ விமானத்துக்கான பில்டர் அசெம்பிளி மற்றும் பிரஷர் பிளேட், டிஸ்க், எக்ஸாஸ்ட் சிஸ்டம் கேஸ்கட், புஷ் ராடு அசெம்பிளி என, ஏராளமான உதிரிபாகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஜாக்குவார், ஹாக் போன்ற போர் விமான உதிரிபாகங்களை கோவை சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தயாரித்து வழங்க, ஆர்டர்களைப் பெற இயலும். இவை தவிர, ஹெச்.ஏ.எல்., தனியார் மற்றும் பொதுத்துறை கப்பல் கட்டும் நிறுவனங்கள் பங்கேற்று, தங்களுக்குத் தேவையான உபகரணங்களைக் காட்சிப்படுத்தியுள்ளன.
கு ண்டுதுளைக்காத ஆடைகள், பாதுகாப்புக் கவசங்கள், வெப்பஅலை உணரிகள், ஆயுத பயிற்சிக்கு உதவும் மெய்நிகர் (வி.ஆர்.,) உபகரணங்கள் என, பாதுகாப்பு துறை சார்ந்த ஏராளமான வாய்ப்புகளை, எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் கண்காட்சி அமைந்துள்ளது.
மூன்று நாள் கண்காட்சி இன்று நிறைவடைகிறது.

