ADDED : செப் 25, 2026 03:49 AM

அ நிறம் | அளவு
வால்பாறை: கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த. அப்பர்பாரளை எஸ்டேட் தொழிலாளி நாகஜோதி மகன் திக்சிதன், 5. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கிறான் .
நேற்று பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மாணவன், வாசல்படியில் தாயுடன் அமர்ந்திருந்தபோது, புதரில் இருந்து வந்த சிறுத்தை, சிறுவனை கவ்வி சென்றது. அதிர்ச்சியடைந்த தாய் மற்றும் அருகில் உள்ளவர்கள் கூச்சலிட்டு, சிறுத்தை மீது கற்களை வீசினர். இதனால் சிறுத்தை, 100 அடி தொலைவில் சிறுவனை விட்டு தப்பியது.
படுகாயமடைந்த சிறுவன், பொள்ளாச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
