/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்கூட்டரில் சென்ற சிறுவன் பஸ் டயரில் சிக்கி உயிரிழப்பு
/
ஸ்கூட்டரில் சென்ற சிறுவன் பஸ் டயரில் சிக்கி உயிரிழப்பு
ஸ்கூட்டரில் சென்ற சிறுவன் பஸ் டயரில் சிக்கி உயிரிழப்பு
ஸ்கூட்டரில் சென்ற சிறுவன் பஸ் டயரில் சிக்கி உயிரிழப்பு
ADDED : ஏப் 05, 2025 11:05 PM
கோவை: உக்கடம் பகுதியில் ஸ்கூட்டரில் சென்ற சிறுவன், சாலையில் தடுமாறி விழுந்ததில், பின்னால் வந்த அரசு பஸ் டயர் ஏறி பலியானார்.
கரும்புக்கடை, சாரமேடு பகுதியை சேர்ந்த அபுதாகீர், மகன் ரிஜாஸ், 17. இவர் தனது நண்பரான ஜெசில், 16 என்பவருடன் உக்கடம் சுங்கம் பைபாஸ் சாலையில், ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.
உக்கடம், பஸ் டிப்போ அருகில் இருவரும், நிலைதடுமாறி சறுக்கி சாலையில் விழுந்தனர். பின்னால் வந்த அரசு பஸ்சின் முன் பக்க டயர், ரிஜாஸ் மீது ஏறி இறங்கியது.
அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஜெசிலுக்கு காலில் காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், ரிஜாஸ் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
சிறுவர்களுக்கு வாகனம்
18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு, வாகனம் கொடுக்கக் கூடாது என அரசு எச்சரித்துள்ளது. மீறி 18 வயதுக்கு கீழ் இருக்கும் சிறுவர்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால், ரூ.25, 000 அபராதம், பெற்றோருக்கு சிறை தண்டனை விதிக்கவும் உத்தரவிடப்பட்டது. எனினும், பலர் சிறுவர்களுக்கு வாகனங்கள் கொடுக்கின்றனர். இது போல் விபத்து நேரும்போதுதான் வருந்துகின்றனர்.

