/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விழிப்புணர்வு திரைப்படம் - சிறுவர், சிறுமியர் பார்த்தனர்
/
விழிப்புணர்வு திரைப்படம் - சிறுவர், சிறுமியர் பார்த்தனர்
விழிப்புணர்வு திரைப்படம் - சிறுவர், சிறுமியர் பார்த்தனர்
விழிப்புணர்வு திரைப்படம் - சிறுவர், சிறுமியர் பார்த்தனர்
ADDED : டிச 01, 2024 11:46 PM
கோவில்பாளையம்; சிறுவர் சிறுமியருக்கு உயிர் சூழல் குறித்த விழிப்புணர்வு திரைப்படம் காண்பிக்கப்பட்டது.
கவுசிகா நீர் கரங்கள் அமைப்பு சார்பில், கோவை மாவட்டத்தில், 18க்கும் மேற்பட்ட குளம், குட்டைகளை துார்வாரி சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. அடர்வனம் அமைக்கப்படுகிறது. நீர்நிலைகள் பாதுகாக்கப்படுகிறது. இந்நிலையில் சிறுவர், சிறுமியருக்கு நீர்நிலைகள் மற்றும் உயிர் சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதன்படி நேற்று முன்தினம் குரும்பபாளையம், காளிங்கராயன் குளத்தில், குழந்தைகளுக்கான சூழலியல் திரைப்படம் இலவசமாக காண்பிக்கப்பட்டது. இதில் கோவில்பாளையம், சரவணம்பட்டி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சிறுவர், சிறுமியர் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர். இதில் உயிர் சூழல் குறித்த பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
சென்னை கேர் எர்த் டிரஸ்ட் உடன் இணைந்து கவுசிகா நீர் கரங்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.