/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூளைச்சாவு அடைந்த சிவில் இன்ஜினியர்
/
மூளைச்சாவு அடைந்த சிவில் இன்ஜினியர்
ADDED : நவ 25, 2025 05:50 AM

அன்னுார்: அன்னுார் அருகே ஒட்டகமண்டலத்தை சேர்ந்தவர் சண்முகம், 40. சிவில் இன்ஜினியர். மனைவி சந்தியா, 32. கடந்த, 22ம் தேதி காலையில் சண்முகம், பொங்கலூரில் தான் கட்டி வரும் கட்டடத்தை பார்வையிட பைக்கில் சென்றார்.
பொங்கலூர் பிரிவு அருகே செல்லும்போது முன்னால் சென்ற தனியார் பள்ளி வாகனத்தின் பின்புறத்தில் மோதி விபத்துக்கு உள்ளானார்.
இதில் படுகாயம் அடைந்த சண்முகத்திற்கு அன்னுார் அரசு மருத்துவமனயில் முதலுதவி அளிக்கப்பட்டது.
பிறகு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவருக்குமூளைச் சாவு ஏற்பட்டது.
சண்முகத்தின் குடும்பத்தார் சண்முகத்தின் உடல் உறுப்புகளை தானம் தர ஒப்புதல் அளித்தனர்.
இதையடுத்து சண்முகத்தின் கல்லீரல் மற்றும் இரண்டு சிறுநீரகங்கள், கே.ஜி. மருத்துவமனைக்கும், கண்கள் சங்கரா கண் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன.
வருவாய்த்துறை சார்பில், தாசில்தார் யமுனா மற்றும் அலுவலர்கள் உறுப்பு தானம் செய்த சண்முகத்தின் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

