/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அபாய நிலையில் கிளை நுாலகம்: பராமரிப்பு பணி செய்யப்படுமா?
/
அபாய நிலையில் கிளை நுாலகம்: பராமரிப்பு பணி செய்யப்படுமா?
அபாய நிலையில் கிளை நுாலகம்: பராமரிப்பு பணி செய்யப்படுமா?
அபாய நிலையில் கிளை நுாலகம்: பராமரிப்பு பணி செய்யப்படுமா?
ADDED : ஜன 14, 2025 09:36 PM

அன்னுார்:
சொக்கம்பாளையம் கிளை நூலக கட்டிடம் அபாய நிலையில் உள்ளது.
அன்னுார் பேரூராட்சியில், சொக்கம்பாளையத்தில், 25 ஆண்டுகளாக கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதை, நாவல், வரலாறு, ஆன்மீகம், சுற்றுலா, பொது அறிவு புத்தகங்கள் உள்ளன. தினசரி, வார, மாத இதழ்கள் அதிக அளவில் இங்கு வருகின்றன.
சொக்கம்பாளையத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், ஐந்து மாணவர், மாணவியர் விடுதிகள் செயல்படுகின்றன.
இங்கு அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. எனினும் இங்குள்ள நூலக கட்டிடம் மோசமான நிலையில் உள்ளது.
கட்டடத்தின் நுழைவாயிலில் உள்ள கான்கிரீட் ஸ்லாப்பில் காரைகள் பெயர்ந்து விழுகின்றன.
கட்டிடத்தின் உள்பகுதியிலும் பல இடங்களில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து இருக்கின்றன. கழிப்பறையில் தண்ணீர் வசதி இல்லை. கட்டிடமும் பராமரிப்பு இல்லாததால் மோசமான நிலையில் உள்ளது.
ஐந்து அரசு விடுதிகளும், அரசு மேல்நிலைப் பள்ளியும் உள்ள ஊரில் கிளை நூலக கட்டிடம் மோசமாக உள்ளது. இதில் பராமரிப்பு பணி செய்ய வேண்டுமென வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.