/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுவாணி குழாயில் உடைப்பு: பல லட்சம் லிட்டர் குடிநீர் வீண்
/
சிறுவாணி குழாயில் உடைப்பு: பல லட்சம் லிட்டர் குடிநீர் வீண்
சிறுவாணி குழாயில் உடைப்பு: பல லட்சம் லிட்டர் குடிநீர் வீண்
சிறுவாணி குழாயில் உடைப்பு: பல லட்சம் லிட்டர் குடிநீர் வீண்
ADDED : மார் 04, 2024 12:43 AM

தொண்டாமுத்தூர்:பேரூரில், சிறுவாணி குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால், பல லட்சம் லிட்டர் குடிநீர், சாலையில் ஓடி வீணாகியது.
மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சிறுவாணி அணை பகுதியில் இருந்து, ராட்சத குழாய்கள் வழியாக, சாடி வயல் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீர் கொண்டுவரப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது.
அதன்பின், அங்கிருந்து குழாய்கள் மூலம் வழியோர கிராமங்களுக்கும், கோவை மாநகராட்சி பகுதிகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், சிறுவாணி மெயின்ரோடு, பேரூர் தாலுகா அலுவலகம் அருகே உள்ள சிறுவாணி குடிநீர் செல்லும் குழாயில் நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, உடைப்பு ஏற்பட்டது.
450 மி.மீ., விட்டமுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், சிறுவாணி மெயின்ரோட்டில், ஆறு போல, குடிநீர் ஓடி வீணாகியது. அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
மாலை, 6:30 மணிக்குப்பின், குடிநீர் வடிகால் வாரியத்தினர், சிறுவாணி சுத்திகரிப்பு நிலையத்திற்கு, சிறுவாணி குழாயில் குடிநீர் வினியோகத்தை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.
இந்த உடைப்பால், அதிகாலை முதல் மாலை வரை, லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணானது.

