/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் சாதனை
/
ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் சாதனை
ADDED : ஜூலை 29, 2025 08:40 PM
கோவை; கே.எம்.சி.எச்., மருத்துவமனை பயன்படுத்தும் அதிநவீன ரோபோடிக் தொழில்நுட்பம், நோயின் தன்மைக்கேற்ப, மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளை, துல்லியமாக செய்ய உதவுகிறது.
துல்லியமான இம்பிளான்ட், மென்மையான திசுக்கள் சேதம் குறைதல், மருத்துவமனையில் தங்கும் காலம் குறைதல், விரைவாக குணமடைதல் ஆகிய பல நன்மைகளை, இந்த சிகிச்சை அளிக்கிறது.
இதுவரை ஆயிரம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்து, ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை கே.எம்.சி.எச்., எட்டியுள்ளது.
கே.எம்.சி.எச்., தலைவர் நல்லா பழனிசாமி, இந்த சாதனையை சாத்தியமாக்கிய எலும்பியல் குழு மருத்துவர்கள் திருமலைசாமி, தென்னவன், லெனின் பாபு ,பாஸ்கரன், பூபதி கிருஷ்ணன் மற்றும் எலும்பியல் துறை பணியாளர்களை பாராட்டினார்.
கே.எம்.சி.எச்., செயல் இயக்குனர் அருண், ''ரோபோடிக் அறுவை சிகிச்சை தொழில்நுட்பத்தில் எங்களது இந்த சாதனை, மருத்துவ கண்டுபிடிப்புகளில் முன்னணியில் இருப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது, '' என்றார்.