/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு; பரிசோதித்து ஆலோசனை
/
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு; பரிசோதித்து ஆலோசனை
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு; பரிசோதித்து ஆலோசனை
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு; பரிசோதித்து ஆலோசனை
ADDED : நவ 08, 2024 11:18 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அடுத்த கோடங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பெண்களுக்கான மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
ராமப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் டாக்டர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். செவிலியர், சுகாதார ஆய்வாளர், மக்களைத் தேடி மருத்துவ தன்னார்வலர் குழுவினர் ஒன்றிணைந்து, மக்களுக்கு பரிசோதனை செய்து, உடல் நிலை குறித்தான சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.
மேலும், 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், 6 மாதத்திற்கு ஒரு முறை அல்லது ஆண்டுக்கு ஒருமுறை மார்பக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
மார்பகத்தில் வலி, கட்டி, நிறம் மாறுதல், அளவுகளில் மாற்றம் போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
பரிசோதனை செய்து கொள்ளவோ அல்லது சிகிச்சை பெற்றுக்கொள்ளவோ பெண்கள் கூச்சப்பட வேண்டாம். மார்பக புற்றுநோய் மற்றும் கேன்சர் போன்ற நோய்கள் ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடித்தால் எளிதில் குணமடையச் செய்யலாம் என, தெரிவிக்கப்பட்டது.
கோடங்கிபட்டி மற்றும் பட்டியகவுண்டனுார் கிராமத்தைச்சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, பள்ளி தலைமையாசிரியர் தினகரன் செய்திருந்தார்.