/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வு
/
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வு
ADDED : அக் 11, 2025 11:09 PM

கோவை: வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் மகளிர் அதிகாரமளிப்பு பிரிவு சார்பில், மார்பக ஆரோக்கியம் மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வு கல்லுாரி அரங்கில் நடந்தது.
மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிதல், வரும் முன் காத்தல், பரிசோதனை முறைகள், சிகிச்சை முறைகள் குறித்து மாணவியருக்கும், ஆசிரியைகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஜெம் மருத்துவமனை நியூக்ளியர் மருத்துவ துறை ஆலோசகர் டாக்டர் பிரித்திகா, மார்பக புற்றுநோய் வராமல் தடுப்பதில் மார்பக சுயபரிசோதனை முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்தார்.
பெண்கள் மார்பகங்களில் ஏதேனும் கட்டி தென்பட்டால், தாமதிக்காமல் சிகிச்சையை துவங்கினால் புற்றுநோய் பாதிப்பில் இருந்து முழுமையாக வெளியேறி, இயல்பான வாழ்க்கை வாழ முடியும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், கல்லுாரி முதல்வர் கலைவாணி, அகாடமிக் ஆராய்ச்சி பிரிவு இயக்குனர் பிருந்தா, மகளிர் அதிகாரமளிப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர் நந்தினி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.