/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேவாங்க மேல்நிலைப்பள்ளி பவள விழா கொண்டாட்டம்
/
தேவாங்க மேல்நிலைப்பள்ளி பவள விழா கொண்டாட்டம்
ADDED : அக் 11, 2025 11:10 PM

கோவை:தேவாங்க மேல்நிலைப் பள்ளியின் பவள விழா கொண்டாடப்பட்டது.
கல்வியாளர் கிருஷ்ணராஜ் வாணவராயர், பவள விழா நினைவு கல்வெட்டை திறந்து வைத்து பேசுகையில்,“கல்வி என்பது சிறந்த மருத்துவர், பொறியாளர் அல்லது தணிக்கையாளர் உருவாக்குவதற்காக அல்ல; நல்ல மனிதர்களை உருவாக்குவதாக அமைய வேண்டும்,” என்றார்.
பள்ளிக்குழுவின் முன்னாள் நிர்வாகிகளின் திருவுருவப்படங்களை, ஓய்வு பெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் கலியமூர்த்தி திறந்து வைத்தார்.
தேவாங்க மேலாண்மைக் குழுவினர், பள்ளியின் முன்னாள் மாணவர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கினர். தேவாங்க பள்ளிக்குழுத் தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, தலைமையாசிரியை ஹேமாமாலினி, நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.