/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எப்பவும் உடல் வலி, சோர்வு... அது வைட்டமின் டி குறைபாடு
/
எப்பவும் உடல் வலி, சோர்வு... அது வைட்டமின் டி குறைபாடு
எப்பவும் உடல் வலி, சோர்வு... அது வைட்டமின் டி குறைபாடு
எப்பவும் உடல் வலி, சோர்வு... அது வைட்டமின் டி குறைபாடு
ADDED : அக் 11, 2025 11:10 PM

உ டம்புக்கு ஒரு பிரச்னையும் இல்ல.. ஆனா கை வலிக்குது, கால் வலிக்குது, உடம்பு வலி என்று உங்கள் வீடுகளில் பெரியவர்கள் புலம்பிக்கொண்டே இருக்கின்றார்களா ? அப்போது வைட்டமின் டி, வைட்டமின் ஈ, வைட்டமின் பி12 போன்ற சத்துக்கள் சரியாக உள்ளதா என்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம்.
இதுகுறித்து, இந்திய மருத்துவ சங்க கோவை செயலாளர் டாக்டர்சீத்தாராம் கூறியதாவது:
முதுமை வயதில் ஊட்டச்சத்து குறைபாடு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்திவிடும். வயதாகிவிட்டது இனி நமக்கு என்ன என்று இருக்காமல், சத்தான உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும். வயது காரணமாக சில சத்துக்கள் உருவாகும் தன்மை இயல்பாகவே நம் உடலில் குறையும். அதற்கேற்ப சத்து மருந்துகளை டாக்டர்கள் பரிந்துரைப்படி எடுத்துக்கொள்வது நல்லது.
வைட்டமின் டி சத்து, எலும்பு அடர்த்தியை சமநிலையாக வைத்துக்கொள்ள அவசியம். தசை செயல்பாடுகளுக்கும் முக்கியமானது. வைட்டமின் டி குறைபாடு இருப்பவர்கள் அடிக்கடி கை, கால் வலி, உடல் வலி என சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.
தோலில் சூரிய ஒளி பட்டு, நம் உடலுக்கு வைட்டமின் டி கிடைக்கிறது. முதுமையில், இச்சத்து உருவாகும் தன்மை குறையும் என்பதால், கவனமாக இருக்கவேண்டும்.
ஆஸ்டியோபோரோசிஸ், தசை பலவீனம், மற்றும் சோர்வு போன்ற நோய்களை ஏற்படுத்தும். வைட்டமின் டி குறைவதால் கால்சியம் சத்தும் உடலில் கிரகிக்கும் தன்மையும் குறைந்துவிடும்.
வைட்டமின் ஈ என்பது முக்கியம். இது ஒரு ஆன்டிஆக்ஸிடன்ட். இது மூளை, கண் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. உடலின் செல்கள் சேதம் அடைவதை தடுத்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
வைட்டமின் பி12 மிகவும் முக்கியம். மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் சரியான செயல்பாட்டிற்கும், ரத்த சிவப்பணுக்கள் உருவாக்கத்திற்கும் இன்றியமையாதது.
எளிதாக தற்போது ஒரு ரத்த பரிசோதனையில் இச்சத்துக்கள் நம் உடலில் குறைவாக உள்ளதா என அறிந்து, அதற்கேற்ப டாக்டர் பரிந்துரையின் பேரில் உணவு வாயிலாகவும், மருந்து வாயிலாகவும் ஊட்டச்சத்துக்களை மேம்படுத்திக்கொள்ளலாம். இதனால், உடல் வலி, சோர்வு போன்றவற்றை தவிர்க்கலாம்.