UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 07:14 PM

அ நிறம் | அளவு
ஆலாந்துறை: ஈஷா அவுட்ரீச் மற்றும் கங்கா மருத்துவமனை சார்பில், பெண்களுக்கான இலவச மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம், தொம்பிலிபாளையம் அரசு பள்ளி மைதானத்தில் நேற்று நடந்தது.
முகாமில், 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு, மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அவர்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை நடந்தது.
புற்றுநோய் கண்டறியப்பட்டவர்களுக்கு, கங்கா மருத்துவமனை சார்பில் இலவச சிகிச்சை வழங்கப்பட உள்ளது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
