தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'மார்பக புற்றுநோய் இல்லை என்ற நிலை ஏற்படுத்தணும்'

'மார்பக புற்றுநோய் இல்லை என்ற நிலை ஏற்படுத்தணும்'

'மார்பக புற்றுநோய் இல்லை என்ற நிலை ஏற்படுத்தணும்'


ADDED : அக் 01, 2024 11:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 01, 2024 11:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை : ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சை, ஆராய்ச்சி மையம் சார்பில், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த, பிரத்யேக டிஜிட்டல் உறுதிமொழி பிரசாரம் துவங்கப்பட்டது. இதற்கென பிரத்யேக இணையதளம் துவங்கப்பட்டது.

எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை தலைமை நிர்வாக அலுவலர் சுவாதி ரோஹித் பேசுகையில், ''மார்பக புற்றுநோயை ஒழிக்க, சத்தான உணவு, உடற்பயிற்சி முக்கியம். தொப்பை இருந்தால், மாரடைப்பு, சர்க்கரை பாதிப்பு, ரத்தக்கொதிப்பு ஏற்படும். பொரித்த உணவு, அதிக சர்க்கரை தவிர்க்க வேண்டும். இதன் வாயிலாக மார்பக புற்றுநோய் இல்லை என்ற நிலையை, ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.

முன்னதாக, மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சை, ஆராய்ச்சி மைய இயக்குனர் குகன் கூறுகையில், ''இந்தாண்டு, சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்ற உறுதிமொழியை எடுக்க, 2http://mhits.in/SROOR/breast_cancer_2024/2 என்ற இணையதளத்தில், க்யூ.ஆர்., கோடு ஸ்கேன் செய்து, மார்பகப்புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை அதிகளவில் எடுத்துச் செல்ல வேண்டும்,'' என்றார்.

எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கார்த்திகேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us