/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சலுகை கட்டணத்தில் மார்பக பரிசோதனை முகாம்
/
சலுகை கட்டணத்தில் மார்பக பரிசோதனை முகாம்
ADDED : அக் 03, 2024 08:14 PM
கோயம்புத்துார் மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில், பெண்களுக்கான மார்பக பரிசோதனை முகாம், அக்., 1ல் துவங்கியது; வரும் 31ம் தேதி வரை நடக்கிறது.
கே.எம்.சி.எச்., மார்பக புற்றுநோய் கதிரியக்க நிபுணர் டாக்டர் ரூபா, டாக்டர் பிரேமா கூறியதாவது:
மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிவதன் வாயிலாக பாதிக்கப்பட்ட பெண்ணின் உயிரை காப்பாற்ற முடியும். பெண்கள் எந்த வயதினராக இருந்தாலும், மார்பு, மார்பகங்களில் வலி, மார்பகத்தில் கட்டி, அக்குள்களில் வீக்கம் ஆகிய அறிகுறிகளில் ஏதாவதொன்று இருந்தாலோ, ரத்தம் சம்பந்தமான நெருங்கிய சொந்தத்தில் யாருக்காவது மார்பக புற்றுநோய் இருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகி உரிய பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
இத்தகைய அறிகுறிகள் இல்லாவிட்டாலும், 40 வயதிற்கு மேற்பட்ட ஆரோக்கியமுள்ள பெண்களும் இந்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். மேலும் பெண்கள் சுய பரிசோதனை வாயிலாக கண்டுபிடிக்க முடியாத ஆரம்ப நிலை கட்டிகளை கூட, மேமோகிராம் பரிசோதனையில் கண்டுபிடித்துவிடலாம். இது ஒரு எக்ஸ்ரே முறை போன்ற பரிசோதனை.
இப்பரிசோதனையில் மார்பகத்தில் கட்டி உருவாவதற்கு முன்பான சிறிய மாற்றங்களை கூட, முன்கூட்டியே கண்டுபிடித்து விடலாம். கண்டுபிடிக்கப்படும், 90 சதவீத கட்டிகள் புற்றுநோய் இல்லாத சாதாரண கட்டிகளாகவே இருக்கும். 10 சதவீத கட்டிகள் மட்டுமே புற்றுநோயாக இருக்கும். இவற்றை முன்கூட்டியே கண்டுபிடிக்கும்போது முழுமையாக குணப்படுத்திவிடலாம்.
மார்பகத்தை அகற்றாமலே கட்டிகளை மட்டும் அகற்றும் நவீன சிகிச்சை தற்போது உள்ளது. இதற்கான அனைத்து வசதிகளுடன் சர்வதேச தரத்திலான மார்பக பரிசோதனை மையம், கே.எம்.சி.எச்.,ல் அமைந்துள்ளது.
மேமோகிராம் பரிசோதனை கருவி, அல்ட்ராசோனோகிராபி இயந்திரம், 3டி எம்.ஆர்.ஐ., வேக்குவம் அசிஸ்டட் பயாப்சி ஆகியவையும் இங்குள்ளது.
மையம் சார்பில், உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் முன்னிட்டு, பெண்களுக்கான மார்பக பரிசோதனை முகாம், அக்., 1ல் துவங்கியது.
அக்., 31ம் தேதி வரை நடக்கும் முகாமில், ரூ.3,750 கட்டணமுள்ள டிஜிட்டல் மேமோகிராம் ரூ.1,200க்கும், ரூ.1,200 கட்டணமுள்ள ஹைடெக் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ரூ.600க்கும் சலுகை கட்டணத்தில் மேற்கொள்ளப்படுகிறது; ஆலோசனையும் வழங்கப்படுகிறது.
முன்பதிவு மற்றும் மேலும் விவரங்களுக்கு, 98940 08800, 0422 432 4151 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.