/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தாய்ப்பாலே குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது! தாய்மார்களுக்கு விழிப்புணர்வு
/
தாய்ப்பாலே குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது! தாய்மார்களுக்கு விழிப்புணர்வு
தாய்ப்பாலே குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது! தாய்மார்களுக்கு விழிப்புணர்வு
தாய்ப்பாலே குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது! தாய்மார்களுக்கு விழிப்புணர்வு
ADDED : ஆக 07, 2025 09:05 PM

பொள்ளாச்சி; ஒவ்வொரு ஆண்டும் உலக தாய்ப்பால் வாரம் ஆக., 1 முதல் 7-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.- அதன்படி, பொள்ளாச்சி ரோட்டரி கிளப் மற்றும் இன்னர்வீல் கிளப் சார்பில், நல்லட்டிபாளையம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
ரோட்டரி கிளப் தலைவர் சதீஷ்சந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் ஸ்ரீகாந்த் முன்னிலை வகித்தார். தொடர்ந்து, தாய்மார்களுக்கு பருப்பு வகைகள், உலர் பழங்கள் மற்றும் தானியங்கள் அடங்கிய ஊட்டச்சத்து தொகுப்புகள் வழங்கப்பட்டது. தவிர, பீரோ உள்ளிட்ட பர்னிச்சர் பொருட்களும் வழங்கப்பட்டன.
டாக்டர்கள் பேசியதாவது:
பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கும், மேம்பாட்டிற்கும் தேவையான ஊட்டச்சத்துகள் தாய்ப்பாலில் மட்டுமே சரிவிகிதத்தில் உள்ளது. தாய்ப்பால் கொடுப்பது தாயின் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.
குழந்தை பிறந்தது முதல் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று உலக அளவில் பரிந்துரைக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் குள்ளத்தன்மை, மெலிவுத்தன்மை, எடைகுறைபாடு போன்ற ஊட்டச்சத்து குறைபாடில்லாத ஆரோக்கியமான குழந்தையாக வளருவர்.
இவ்வாறு, பேசினர்.
விழிப்புணர்வு பேரணி பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, கோவை அபிராமி செவிலியர் கல்லுாரி சார்பில், உலக தாய்ப்பால் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா, கோவை மாவட்ட இயக்குனர் டாக்டர் சுமதி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
சப் - கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய பேரணியில், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி மாணவியர், சத்துணவு ஊழியர்கள், கோஷங்களை எழுப்பியபடியும் முக்கிய வீதிகள் வழியாக சென்று, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையை அடைந்தனர். நோயாளிகள் நலச்சங்க உறுப்பினர் நடராஜ் மற்றும் பலர் பங்கேற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா, குழந்தைகள் நலப்பிரிவு தலைவர் டாக்டர் செல்வராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
கிணத்துக்கடவு கிணத்துக்கடவு, ஏலூரில் உள்ள என்.எம்., நர்சிங் கல்லூரி சார்பில், தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில், கல்லூரி மாணவர்கள் கிணத்துக்கடவு புது பஸ் ஸ்டாண்ட் முதல் பழைய பஸ் ஸ்டாப் வரை, தாய்ப்பாலின் மகத்துவம் குறித்த பதாகைகளை ஏந்தியபடி பேரணியாக நடந்து சென்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில், என்.எம்., நர்சிங் கல்லூரி முதல்வர் பொன்னம்மாள், பார்மசி முதல்வர் இந்து லதா, மாணவர் -- செவிலியர் சங்க ஆலோசகர் ரூபிதா மற்றும் கிணத்துக்கடவு போலீசார் பங்கேற்றனர்.