ADDED : ஆக 14, 2026 01:51 PM
அ நிறம் | அளவு
கோவை: மாற்று திறனாளிகளுக்கான பிரத்யேக தாய்ப்பால் மற்றும் தாய்மைக்கால பராமரிப்பு விழிப்புணர்வு முகாம், ஆர்.எஸ்.புரம் சேவா ஆசிரமத்தில் நடந்தது.
இன்னர் வீல் கிளப் ஆப் கோயம்புத்தூர் விருக்ஷம் நடத்திய நிகழ்ச்சியில், ஏராளமான மாற்று திறனாளிகள் பங்கேற்றனர்.
தாய்ப்பாலின் அவசியம், நன்மைகள், சவால்கள், தீர்வுகள் குறித்து டாக்டர் பாரதி சிங் விளக்கினார். பிரசவத்திற்கு முன், பின் பின்பற்ற வேண்டிய பராமரிப்பு குறித்து கவிதா நந்தகுமார் பேசினார். அமைப்பின் துணை தலைவர் ரூபா எளிய யோகா பயிற்சிகளை வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு நிகழ்ச்சியை புரியவைக்க உதவும் சைகை மொழிபெயர்ப்பாளர்கள், காதுகேளாதோர் சங்கத்தினர், கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். கிளப் தலைவர் ஷில்பா வரவேற்றார். செயலாளர் காந்திமதி நன்றி கூறினார்.
