/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லஞ்சம் வாங்கிய ஏட்டு 'சஸ்பெண்ட்'
/
லஞ்சம் வாங்கிய ஏட்டு 'சஸ்பெண்ட்'
ADDED : ஏப் 14, 2025 04:20 AM
போத்தனூர்: போத்தனூர் அடுத்த செட்டிபாளையத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பாஸ்போர்ட்டை புதுப்பிக்க விண்ணப்பித்திருந்தார்.
செட்டிபாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு, விண்ணப்ப விபரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போலீஸ் ஸ்டேஷன் ரைட்டர் ஏட்டு ரமேஷ், கிருஷ்ணமூர்த்தியை தொடர்புகொண்டு கள ஆய்வுக்கு ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். கடந்த 9ம் தேதி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற கிருஷ்ணமூர்த்தி, ஆயிரம் ரூபாயை ரமேஷிடம் கொடுக்கும்போது, திட்டமிட்டபடி அங்கு மறைந்திருந்த, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ரமேைஷ பிடித்தனர். மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்ட ரமேஷ் சிறையிலடைக்கப்பட்டார்.
துறை சார்ந்த நடவடிக்கையாக எஸ்.பி., கார்த்திகேயன், ஏட்டு ரமேஷை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

