/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லஞ்ச பெற்ற வசூலர் ஜாமின் மனு தாக்கல்
/
லஞ்ச பெற்ற வசூலர் ஜாமின் மனு தாக்கல்
ADDED : செப் 03, 2025 11:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; சரவணம்பட்டியை சேர்ந்த ஆனந்தவேல், பெ.நா.பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீட்டுமனைக்கு அங்கீகாரம் பெறுவதற்கு விண்ணப்பித்தார். பேரூராட்சியில் வரி வசூலிக்கும் அலுவலர் சதீஷ்குமார்,40, லஞ்சம் கேட்டார்.
கடந்த, 21ம் தேதி, லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரைப்படி, லஞ்ச பணம், 40,000 ரூபாயை ஆனந்தவேல் கொடுத்தார். அப்போது, சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமினில் விடுவிக்கக்கோரி, கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்; 8ல் விசாரணைக்கு வருகிறது.