/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ. 8 லட்சத்தில் கட்டப்பட்ட பாலம்; ஒரே ஆண்டில் சேதமான அவலம்
/
ரூ. 8 லட்சத்தில் கட்டப்பட்ட பாலம்; ஒரே ஆண்டில் சேதமான அவலம்
ரூ. 8 லட்சத்தில் கட்டப்பட்ட பாலம்; ஒரே ஆண்டில் சேதமான அவலம்
ரூ. 8 லட்சத்தில் கட்டப்பட்ட பாலம்; ஒரே ஆண்டில் சேதமான அவலம்
ADDED : பிப் 05, 2025 12:22 AM

அன்னூர்; பூலுவபாளையம் குளக்கரையையும் சிறுமுகை சாலையையும் இணைக்கும் பாலம் கட்டப்பட்ட ஒரே ஆண்டில் சேதமடைந்து பயனில்லாமல் உள்ளது.
அன்னூரில் சிறுமுகைசாலையில் 60 ஏக்கர் பரப்பளவு உள்ள பூலுவபாளையம் குளம் உள்ளது. ஒட்டர்பாளையம் ஊராட்சியை சேர்ந்த பூலுவபாளையத்தில், 1500 க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். பிரிவில் இருந்து ஊருக்கு ஒரு கி.மீ., தொலைவு செல்ல வேண்டி உள்ளது.
அதற்கு பதில் குளக்கரையையும் சிறுமுகை சாலையையும் இணைக்கும் பாலம் அமைத்தால் ஊருக்குள் எளிதாக செல்ல முடியும். எனவே சிறு பாலம் அமைக்க, பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரி வந்தனர்.
இதையடுத்து எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் நீலகிரி எம்.பி., ராஜா, எட்டு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கினார். இதையடுத்து, 2023ம் ஆண்டு சிறுமுகை சாலையையும், பூலுவ பாளையம் குளக்கரையையும் இணைக்கும் பாலம் கட்டப்பட்டது.
புலுவபாளையம் மக்கள் கூறுகையில், 'கட்டப்பட்ட சில மாதங்களிலேயே பாலத்தையும் குளக்கரையையும் இணைக்கும் பகுதி சேதமடைந்து கரைந்து அடித்துச் செல்லப்பட்டு விட்டது. இதனால் பாலத்தின் வழியாக குளக்கரைக்கு செல்ல முடிவதில்லை. பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து எட்டு லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டியும் எந்த பயனும் இல்லாமல் பொம்மை போல் காட்சி தருகிறது. அதிகாரிகள் பாலத்தையும் குளக்கரையையும் இணைக்கும் வகையில் மீண்டும் பராமரிப்பு பணி செய்து, பூலுவபாளையம் மக்கள் எளிதில் சிறுமுகை சாலையிலிருந்து பூலுவபாளையம் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.