தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பாலம் கட்டும் பணி முடக்கம்; அரசு பஸ் இயக்கம் நிறுத்தம்

பாலம் கட்டும் பணி முடக்கம்; அரசு பஸ் இயக்கம் நிறுத்தம்

பாலம் கட்டும் பணி முடக்கம்; அரசு பஸ் இயக்கம் நிறுத்தம்


ADDED : ஜூன் 02, 2025 06:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 02, 2025 06:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னுார் : பாலம் கட்டும் பணி முடங்கியதால், அரசு பஸ் இயங்குவது நிறுத்தப்பட்டது.

கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலையில், அன்னுார் அடுத்த செல்லப்பம் பாளையத்திலிருந்து ஆம்போதி செல்லும் வழியில், பாலம் கட்டும் பணி, சில மாதங்களுக்கு முன் துவங்கியது. இந்த பணி பல வாரங்களாக முடங்கியுள்ளது.

அப்பகுதி மக்கள் கூறுகையில், 'பாலம் கட்டும் பணி முடங்கியதால், வடுகபாளையம், சாலையூர், மகாலட்சுமி நகர் மற்றும் ரங்கசமுத்திரத்திலிருந்து, செல்லப்பம்பாளையம் நடுநிலைப்பள்ளிக்கு செல்லும் பள்ளி மாணவ, மாணவியர் சிரமப்படுகின்றனர். இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

'இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த அரசு பஸ் தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. பாலம் கட்டும் பணியை மீண்டும் துவக்கி முடிக்க வேண்டும். குட்டையில் இருந்து வெளியேறும் மழை நீர் செல்ல குழாய் அமைக்க வேண்டும்' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us