/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அகலமாகிறது பாலம்; திருச்சி ரோட்டில் வாகன ஓட்டிகள் நிம்மதி
/
ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அகலமாகிறது பாலம்; திருச்சி ரோட்டில் வாகன ஓட்டிகள் நிம்மதி
ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அகலமாகிறது பாலம்; திருச்சி ரோட்டில் வாகன ஓட்டிகள் நிம்மதி
ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அகலமாகிறது பாலம்; திருச்சி ரோட்டில் வாகன ஓட்டிகள் நிம்மதி
ADDED : ஜூன் 09, 2025 10:26 PM

கோவை; திருச்சி ரோட்டில் சங்கனுார் வாய்க்கால் கடக்கும் பாலமானது, 7 மீ.,க்கு அகலப்படுத்தப்படுவதால், விபத்து அபாயம் குறைந்து வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
மாநகரில் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்துவரும் அதேவேளையில், நெரிசல் பிரச்னையும் தலைதுாக்கி வருகிறது. திருச்சி ரோடு, ராமநாதபுரம் - சிங்காநல்லுார் நோக்கி செல்லும் வழியில், ராஜலட்சுமி மில்ஸ் பஸ் ஸ்டாப் அடுத்து இடது புறமாக, ஜி.வி., ரெசிடென்சி பகுதிக்கு ரோடு செல்கிறது.
இதன் அருகே, திருச்சி ரோட்டை கடந்து சிங்காநல்லுார் குளத்துக்கு சங்கனுார் வாய்க்கால் செல்கிறது. வாய்க்கால் கடக்கும் பாலத்தின் இடதுபுறமாக, வாகனங்கள் செல்லும் போது குறுகல் காரணமாக விபத்துகள் ஏற்பட்டு வந்தன.
அப்பகுதியில், 'யு டர்ன்' வசதி இருந்தும், இந்த பாலத்தை ஒட்டி ஒன்வேயில் வாகனங்கள் விதிமீறுவதும் தொடர்கிறது. விபத்துகளை தவிர்க்கும் விதமாக, பாலத்தை அகலப்படுத்த தேசிய நெடுஞ்சாலை துறையினர் முடிவு செய்தனர்.
தற்போது, 7 மீ., அகலத்துக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடந்துவருகின்றன. இதனால், வாகனங்கள் தடுமாறாமல் செல்ல முடியும் என்பதால், வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சங்கனுார் வாய்க்கால் கடக்கும் பாலம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அகலப்படுத்தப்பட்டு வருகிறது. முன்பு, வாகன ஓட்டிகள் 'பிரீ லெப்ட்' செல்லும் போது அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. இதனால், அப்பாலத்தை அகலப்படுத்தி வருகிறோம். இம்மாதத்துக்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்' என்றார்.