/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிகளுக்கான தடகள போட்டி: பிருந்தாவன் பள்ளி சாம்பியன்
/
பள்ளிகளுக்கான தடகள போட்டி: பிருந்தாவன் பள்ளி சாம்பியன்
பள்ளிகளுக்கான தடகள போட்டி: பிருந்தாவன் பள்ளி சாம்பியன்
பள்ளிகளுக்கான தடகள போட்டி: பிருந்தாவன் பள்ளி சாம்பியன்
ADDED : நவ 09, 2025 11:15 PM
கோவை: 'ஸ்போர்ட்ஸ் லேண்ட்' சார்பில், பள்ளிகளுக்கு இடையேயான தடகள போட்டிகள், கோவை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.
இதில், 8, 10, 12, 14, 16 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியருக்கு, 50 மீ., 60 மீ., 75 மீ., 80 மீ., 100 மீ., 200 மீ., 300 மீ., 600 மீ., 1,000 மீ., ஓட்டம் நடந்தது.
தவிர, சாப்ட்பால் த்ரோ, ஸ்டேண்டிங் லாங் ஜம்ப், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், 4*100 மீ., தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில், 2,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்று, தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
போட்டிகளை, நல்லறம் அறக்கட்டளையின் தலைமை அமைப்பாளர் சுரேஷ்குமார், கோவை மாவட்ட போக்குவரத்து ஆலோசகர்கள் நலச்சங்க தலைவர் மணிகண்டன், ரோட்டரி கிளப் ஆப் சோமனுார் டெக்ஸிட்டி தலைவர் சாமிவேல் ஆகியோர், போட்டிகளை துவக்கிவைத்தனர்.
ஸ்போர்ட்ஸ் லேண்ட் நிர்வாக இயக்குனர் நவீன் ஜான் உடனிருந்தார். தொடர்ந்து, மாணவ, மாணவியரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர் .
போட்டிகளின் நிறைவில், பிருந்தாவன் வித்யாலயா பப்ளிக் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

