/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சர்வீஸ் ரோட்டில் மெகா பள்ளம்; விபத்து ஏற்படும் அபாயம்
/
சர்வீஸ் ரோட்டில் மெகா பள்ளம்; விபத்து ஏற்படும் அபாயம்
சர்வீஸ் ரோட்டில் மெகா பள்ளம்; விபத்து ஏற்படும் அபாயம்
சர்வீஸ் ரோட்டில் மெகா பள்ளம்; விபத்து ஏற்படும் அபாயம்
ADDED : நவ 09, 2025 11:13 PM

சர்வீஸ் ரோடு சேதம் கிணத்துக்கடவு, புது பஸ் ஸ்டாண்டு அருகே உள்ள, சர்வீஸ் ரோடு சேதம் அடைந்து பள்ளம் போன்ற பெரிய அளவிலான குழி ஏற்பட்டுள்ளதால், இரவு நேர பைக் ஓட்டுநர்கள் பலர் சிரமத்துடன் பயணிக்கின்றன எனவே, வாகன ஓட்டுனர்களின் நலன் கருதி, இந்த ரோட்டை விரைவில் சீரமைப்பு செய்ய வேண்டும்.
-- கண்ணன்: ரோட்டோர குப்பை பொள்ளாச்சி, வால்பாறை ரோடு தொழிற்பேட்டை அருகே வாய்க்கால் பகுதி ரோட்டோரம் அதிக அளவு குப்பை கொட்டப்பட்டுள்ளது. இதனால் இங்கிருக்கும் தெரு நாய்கள் குப்பையை ரோட்டுக்கு இழுத்து கிளறுவதால், அப்பகுதி மக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே இங்கு கொட்டப்பட்டு இருக்கும் குப்பையை அகற்ற வேண்டும்.
--- செந்தாமரை: வாகனத்தால் தொல்லை பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 3 வார்டு, காவலர் திருமண மண்டபம் அருகே உள்ள ரோட்டோரம், பல மாதங்களாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனம் அருகே மர்ம நபர்கள் சிலர் மது அருந்துவது, பீடி சிகரெட் புகைப்பது, சிறுநீர் கழிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதால் இப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, இந்த வாகனத்தை உடனடியாக அகற்றம் செய்ய வேண்டும்.
-- செல்வகுமார்: ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா-? பொள்ளாச்சி, கோட்டூர் பேரூராட்சிக்குட்பட்ட ஆழியார் செல்லும் வழியில், ரோட்டை ஆக்கிரமிப்பு செய்து தள்ளுவண்டிக் கடைகள் வைத்திருப்பதால், அவ்வழியாக செல்லும் பிற வாகனங்களுக்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், விபத்து அபாயம் அதிக அளவில் உள்ளது. எனவே, ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்றம் செய்ய வேண்டும்.
-- மணிவேல்: கழிவு நீர் தேக்கம் கிணத்துக்கடவு, பள்ளிவாசல் அருகே ரோட்டின் ஓரம் அதிக அளவில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு கடும் துர்நாற்றம் வீசுவது உடன், பொது சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதை பேரூராட்சி நிர்வாகத்தினர் கவனித்து உடனடியாக கழிவு நீரை அகற்ற வேண்டும்.
-- ராஜ்: தரைப்பாலம் சேதம் உடுமலை அருகே பெதப்பம்பட்டியிலிருந்து கோட்டமங்கலம் செல்லும் ரோட்டில் உள்ள தரைபாலம் சேதமடைந்துள்ளது. இதனால், வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமம் ஏற்படுகிறது. எனவே, இந்த பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கண்ணன்: பஸ் ஸ்டாண்டில் கழிவுநீர் உடுமலை பஸ் ஸ்டாண்டில் கடைகளிலிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் வெளியே ரோட்டிலியே செல்கிறது. இதனால், துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராஜேந்திரன்: பிளாஸ்டிக் கழிவுகள் உடுமலை - பழநி ரோட்டில் ரோட்டோரங்களில் குப்பை, பிளாஸ்டிக் போன்றவை வீசப்படுகின்றன. இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. எனவே, ரோட்டில் குப்பை போடுவோர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கருப்பசாமி: கூடுதல் பஸ் இயக்கணும் உடுமலை அருகே திருமூர்த்திமலை, அமராவதிக்கு வார விடுமுறை நாட்களில் அதிக அளவில் சுற்றுலா பயணியர் வருகின்றனர். ஆனால் இந்த இடங்களுக்கு செல்ல போதிய பஸ்கள் இல்லை. எனவே, அந்த நாட்களில் கூடுதல் பஸ்கள் இயக்க போக்குவரத்து கழகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- செல்வி: ரோட்டில் வாகனங்கள் நிறுத்தம் உடுமலை - பொள்ளாச்சி ரோட்டில் கார், மோட்டர் சைக்கள்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், பிற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, பிரதான ரோட்டில் வாகனங்கள் நிறுத்துவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பழனிச்சாமி: பூங்காவை பராமரியுங்க உடுமலை நகராட்சி ஸ்ரீ நகர் பூங்கா பராமரிப்பில்லாததால், குப்பை நிறைந்து காணப்படுகிறது. விளையாட்டு உபகரணங்களும் பொலிவிழிந்துள்ளன. இதனால், குழந்தை பயன்படுத்த முடிவதில்லை. எனவே, பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- முருகன்:

