/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிேஷகம் கோலாகலம்
/
செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிேஷகம் கோலாகலம்
ADDED : நவ 09, 2025 11:12 PM

வால்பாறை: நடுமலை எஸ்டேட் செல்வ விநாயகர் கோவிலில் நடந்த, மஹா கும்பாபிேஷக விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
வால்பாறை அடுத்துள்ளது நடுமலை எஸ்டேட் வடக்கு டிவிஷன். இங்குள்ள துண்டுக்கருப்பராயர் சுவாமி கோவில் நுழைவு வாயிலில், அமைக்கப்பட்டுள்ள செல்வவிநாயகர் கோவில் மஹாகும்பாபிேஷக விழாவையொட்டி நேற்று முன் தினம் மாலை, 6:00 மணிக்கு நடுமலை தெற்கு விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாகச்சென்றனர்.
தொடர்ந்து மாலை, 7:00 மணிக்கு அனுக்ஞை, கணபதி பூஜை, யாகசாலை பிரவேசம், சாந்தி ேஹாமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
விழாவில், நேற்று காலை, 6:00 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜையும், காலை, 9:00 மணிக்கு யாத்ரா தானம், கடம், கலசங்கள் புறப்பட்டது. காலை, 9:45 மணிக்கு யாகசாலையிலிருந்து புனித நீர் எடுத்து ஊர்வலமாக சென்று விமான கலசத்திற்கு மஹாகும்பாபிேஷகம் செய்யப்பட்டது.
காலை, 10:00 மணிக்கு செல்வவிநாயகருக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் விநாயகபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் நடுமலை எஸ்டேட் மேலாளர் டென்சில், பீல்டு ஆபீசர்கள் ஞானசேகர், ரோஸ்பாண்டியன், தி.மு.க., நகர செயலாளர் சுதாகர், நகராட்சி துணைத்தலைவர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

