/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிருந்தாவன் வித்யாலயா விளையாட்டு விழா
/
பிருந்தாவன் வித்யாலயா விளையாட்டு விழா
ADDED : செப் 29, 2025 12:34 AM

போத்தனுார்; மதுக்கரை அடுத்த குரும்பபாளையம் பிரிவு அருகே உள்ள பிருந்தாவன் வித்யாலயா பப்ளிக் பள்ளியின், 11ம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.
பள்ளி நிறுவனர் கனகாச்சலம், தாளாளர் வசந்தராஜன், நிர்வாக அறங்காவலர் திருமூர்த்தி தலைமை வகித்தனர். முதல்வர் வனிதா வரவேற்றார். தேசியக்கொடியை, சிறப்பு விருந்தினரான பாரதியார் பல்கலையின் உடற்கல்வி துறை தலைவர் ராம்குமாரும், பள்ளி கொடியை முதல்வர் வனிதாவும் ஏற்றினர்.
மூத்தோருக்கான இவ்விளையாட்டு விழாவில், மாணவர்களின் அணிவகுப்பு, தொடர் பயிற்சி, மல்லர் கம்பம், கராத்தே, யோகா, சிலம்பம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.