/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உற்பத்தியை நிறுத்த கறிக்கோழி பண்ணை விவசாயிகள் முடிவு
/
உற்பத்தியை நிறுத்த கறிக்கோழி பண்ணை விவசாயிகள் முடிவு
உற்பத்தியை நிறுத்த கறிக்கோழி பண்ணை விவசாயிகள் முடிவு
உற்பத்தியை நிறுத்த கறிக்கோழி பண்ணை விவசாயிகள் முடிவு
ADDED : டிச 25, 2025 05:05 AM
அன்னூர்: கறிக்கோழி பண்ணை விவசாயிகள் அணி மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம், அன்னூரில் நடந்தது. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் முத்து விசுவநாதன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், கடந்த, 4 ஆண்டுகளாக வளர்ப்பு கூலி உயர்த்தப்படவில்லை. மின்சாரம், தீவனம், மருந்து, தொழிலாளர் கூலி மற்றும் பராமரிப்பு செலவுகள் அதிகரித்த நிலையில் ஒப்பந்த நிறுவனங்கள் வளர்ப்பு கூலி மிகக் குறைவாக தருகின்றனர்.
கறிக்கோழி வளர்ப்பு கூலி ஒரு கிலோவுக்கு 20 ரூபாயும், நாட்டுக்கோழி வளர்ப்புக்கு 25 ரூபாயும், காடைக்கு ஏழு ரூபாயும் வழங்க வேண்டும். பண்ணைகளுக்கு கட்டணமில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜன. 1ம் தேதி முதல், கறிக்கோழி உற்பத்தியை நிறுத்த முடிவு செய்யப்பட்டது.
கறிக்கோழி பண்ணையாளர்கள் சங்க நிர்வாகி மகாலிங்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் விவேக், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

