/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மகளிர் சுய உதவி குழுவினரின் -2025 மதி கண்காட்சி துவக்கம்
/
மகளிர் சுய உதவி குழுவினரின் -2025 மதி கண்காட்சி துவக்கம்
மகளிர் சுய உதவி குழுவினரின் -2025 மதி கண்காட்சி துவக்கம்
மகளிர் சுய உதவி குழுவினரின் -2025 மதி கண்காட்சி துவக்கம்
ADDED : டிச 25, 2025 05:05 AM
கோவை: மகளிர் சுய உதவி குழுவினரின் தயாரிப்பு பொருட்களை அறிமுகம் செய்யும் 'சாரஸ் -2025 மதி' கண்காட்சியை, கோவை எம்.பி.,ராஜ்குமார், கலெக்டர் பவன்குமார் ஆகியோர் கொடிசியா ' டி' அரங்கில் துவக்கி வைத்தனர்.
ஆந்திரா, ராஜஸ்தான், கர்நாடகா, மகாராஷ்டிரா, பீஹார், புதுவை, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் சார்பாக 10 அரங்குகளும், தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களை சேர்ந்த மகளிர் குழுவினரின், 113 அரங்குகளும், பிற துறைகள் சார்பில் 10 அரங்குகள் என்று மொத்தம், 172 அரங்குகள் அமைந்துள்ளன. கண்காட்சி வரும் ஜன.,1 வரை நடைபெறும்.
மரப்பொம்மை, மூலிகை சோப், மசாலா பொருள், மரசெக்கு எண்ணெய், சாம்பிராணி, சணல்பை, சேலைகள், அலங்காரப் பொருட்கள், தேன், உணவு பொருள், வீட்டு உபயோகப் பொருட்கள் இடம் பெற்றுள்ளன.
இக்கண்காட்சியில், ஐந்து மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளையும், சமுதாய திறன் பயிற்சி நிறைவு சான்றிதழ்களையும், 10 பயனாளிகளுக்கும் களப்பயிற்சி முடித்த கல்லூரி மாணவியருக்கு, பயிற்சி சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட அலுவலர் மதுரா, மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜெகதீஸ்வரி, உதவி திட்ட அலுவலர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், வங்கி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

