/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உடைந்து தொங்கும் சிக்னல்; மின்விளக்கு சீரமைக்க எதிர்பார்ப்பு
/
உடைந்து தொங்கும் சிக்னல்; மின்விளக்கு சீரமைக்க எதிர்பார்ப்பு
உடைந்து தொங்கும் சிக்னல்; மின்விளக்கு சீரமைக்க எதிர்பார்ப்பு
உடைந்து தொங்கும் சிக்னல்; மின்விளக்கு சீரமைக்க எதிர்பார்ப்பு
ADDED : பிப் 11, 2025 11:32 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, கோட்டூர் பஸ் ஸ்டாப் ஒட்டிய ரயில்வே மேம்பாலத்தில், உடைந்து தொங்கும் சிக்னல் மின்விளக்கை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி, கோட்டூர் பஸ் ஸ்டாப் அருகே ரயில்வே மேம்பாலம் சுற்றுப்பகுதி கிராமங்களை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ளது.
குறிப்பாக, கிராம மக்கள் மட்டுமின்றி, வால்பாறை, ஆழியாறு உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு சென்றும் திரும்பும் சுற்றுலாப் பயணியரும், இந்த மேம்பாலத்தையே பயன்படுத்துகின்றனர்.
இதனால், இவ்வழித்தடத்தில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகளவில் காணப்படும். இங்கு, தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டு, செயலிழந்து காணப்படுகிறது.
தற்போது, அந்த சிக்னலின் மின்விளக்கு உடைந்து தொங்குவதால், விபத்து ஏற்படும் சூழலும் நிலவி வருகிறது. அதனை விரைந்து சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது: ரயில்வே மேம்பாலத்தில் உடைந்து தொங்கும் தானியங்கி சிக்னலை சீரமைக்க வேண்டும். இதேபால, ரயில்வே மேம்பாலத்தில், இருபுறமும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பல இரவுகளில், மின்விளக்குகள் எரிவதில்லை.
சில நேரங்களில், முழுமையாக அல்லாமல், சில விளக்குகள் மட்டுமே எரிகின்றன. துறை ரீதியான அதிகாரிகள், பழுதான விளக்குகளை சரி செய்வதுடன், இரவு நேரங்களில் விளக்குகள் எரிவதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், இத்தகைய குறுகிய மேம்பாலத்தில் வாகனங்கள் முந்திச் செல்லக்கூடாது என, விதிமுறை உள்ளது. அதனை அனைத்து வாகன ஓட்டுநர்கள் அறிந்து கொள்ளும் வகையில், விழிப்புணர்வு பலகை வைப்பதும் அவசியம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

