ADDED : ஜூன் 06, 2025 12:26 AM

பொள்ளாச்சி,; பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகம் அருகே, குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது.
பொள்ளாச்சி நகராட்சி பகுதிக்கு தினமும், அம்பராம்பாளையம் ஆற்றில் உள்ள, நீரேற்று நிலையத்தில் இருந்து, தினமும், 1.4 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
மார்க்கெட் ரோட்டில் உள்ள நீர்உந்து நிலையம் வாயிலாக, ஒன்பது உயர் மட்ட குடிநீர் தேக்க தொட்டி, இரண்டு தரைமட்ட நீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், சப் - கலெக்டர் அலுவலகம் அருகே, வெங்கடேசா காலனி பகிர்மான குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. உடைப்பு ஏற்பட்ட பகுதியில் இருந்து அதிகளவு குடிநீர் வெளியேறி, சப் - கலெக்டர் அலுவலகம் முன் குட்டை போல தேங்கியது.
குடிநீர் வீணாவதை தடுக்க, உடனடியாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'நெடுஞ்சாலைத்துறை ரோடு என்பதால், அத்துறை அனுமதிக்காக கடிதம் அனுப்பப்பட்டது. அனுமதி கிடைத்துள்ளதால், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,' என்றனர்.