/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய சப்-ஜூனியர் டேக்வாண்டோ கோவை மாணவிக்கு வெண்கலம்
/
தேசிய சப்-ஜூனியர் டேக்வாண்டோ கோவை மாணவிக்கு வெண்கலம்
தேசிய சப்-ஜூனியர் டேக்வாண்டோ கோவை மாணவிக்கு வெண்கலம்
தேசிய சப்-ஜூனியர் டேக்வாண்டோ கோவை மாணவிக்கு வெண்கலம்
ADDED : பிப் 06, 2024 12:24 AM

கோவை:சட்டீஸ்கர் மாநிலத்தில் நடந்த, தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில், கோவை பள்ளி மாணவி வெண்கலம் வென்றார்.
இந்திய டேக்வாண்டோ சம்மேளனம் சார்பில், 37வது தேசிய அளவிலான சப்-ஜூனியர் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி, சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடந்தது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து, 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்ற இப்போட்டியில், தமிழக அணி சார்பில் 22 மாணவர்கள் பங்கேற்றனர். அதில், மூவர் கோவையை சேர்ந்தவர்கள்.
தேசிய போட்டியில், 35 கிலோ எடைக்கு உட்பட்ட சிறுமியர் பிரிவில் பங்கேற்ற எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி மாணவி அனுஷ்கா, சிறப்பாக விளையாடி வெண்கலப்பதக்கம் வென்றார்.
வெற்றி பெற்ற மாணவியை, கோவை மாவட்ட ஸ்போர்ட்ஸ் டேக்வாண்டோ சங்க தலைவர் லட்சுமண நாராயணன், செயலாளர் சிஜூ குமார் ஆகியோர் பாராட்டினர்.