/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மத போதகர் ஜான் ஜெபராஜ் மனைவியின் சகோதரர் கைது
/
மத போதகர் ஜான் ஜெபராஜ் மனைவியின் சகோதரர் கைது
ADDED : ஏப் 17, 2025 07:22 AM
கோவை; போக்சோ வழக்கில் கைதான ஜான் ஜெபராஜின், முன்னாள் மனைவியின் சகோதரரை, போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர்.
கிறிஸ்தவ பாடல்கள் எழுதி, இசையமைத்து, பாடி பிரபலமானவர் போதகர் ஜான் ஜெபராஜ், 35. தென்காசி மாவட்டத்தை சேர்ந்த இவர், கோவை ஜி.என். மில்ஸ் பகுதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து, கோவையில் வசித்து வந்தார்.
கடந்த ஆண்டு தனது வீட்டில் நடந்த, ஒரு நிகழ்ச்சியில் சிறுமியர் இருவருக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக, கோவை மத்திய அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
மூணாறில் தலைமறைவாக இருந்த ஜான் ஜெபராஜை, கடந்த 13ம் தேதி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சிறுமியிடம் விசாரணை நடத்திய போது, ஜான் ஜெபராஜின் முன்னாள் மனைவியின் சகோதரர் பென்னட் ஹாரிஸ், 32 என்பவரும் பாலியல் தொல்லை கொடுத்ததாக, வாக்குமூலம் அளித்தார். போலீசார் அவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.