/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'அறம் மீறியவர்களுக்கு உடன்பிறப்பே பகை'
/
'அறம் மீறியவர்களுக்கு உடன்பிறப்பே பகை'
ADDED : ஜன 11, 2024 12:27 AM

கோவை : ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் கிக்கானி பள்ளி அரங்கில் நடந்த, 'எப்போ வருவாரோ 2024' என்ற ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியின். நிறைவு நாளான நேற்று முன் தினம், 'அருளாளர் ஸ்ரீ ஞானானந்தகிரி' என்ற தலைப்பில், சொ.சொ.மீ.சுந்தரம் சொற்பொழிவாற்றியதாவது:
அறத்தின் வழியில் நின்றவனுக்கு எல்லா உயிர்களும் துணை; அறத்தை மீறியவர்களுக்கு, உடன்பிறப்பே பகை என, ராமாயணத்தை ஞானானந்தகிரி சுவாமி சுருக்கமாக எடுத்துரைத்தார்.
நன்னூலை கற்பது நன்று. அதைவிட சிறந்தது தன்னூல். நீ யார் என்பதை கற்றுக்கொள்வதே சிறந்தது. அதற்காக பூணும் நூல், பூணூல். எந்த வீட்டில் தேவாரம், திருவாசகம், திருவாய்மொழி இவை இருக்கிறதோ, அங்கு, கெட்ட ஆவிகள் இருக்காது.
இவ்வாறு, அவர் பேசினார்.
இதில், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் கிருஷ்ணன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.