/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.எஸ்.என்.எல்., நெட்ஒர்க் பிரச்னை; வாடிக்கையாளர்கள் தவிப்பு
/
பி.எஸ்.என்.எல்., நெட்ஒர்க் பிரச்னை; வாடிக்கையாளர்கள் தவிப்பு
பி.எஸ்.என்.எல்., நெட்ஒர்க் பிரச்னை; வாடிக்கையாளர்கள் தவிப்பு
பி.எஸ்.என்.எல்., நெட்ஒர்க் பிரச்னை; வாடிக்கையாளர்கள் தவிப்பு
ADDED : மார் 30, 2025 10:48 PM
வால்பாறை; பி.எஸ்.என்.எல்., நெட் ஒர்க் கிடைக்காததால், வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகினர்.
கோவை மாவட்டம் வால்பாறையில், பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் அதிக அளவில் உள்ளனர். வாடிக்கையாளர்கள் வசதிக்காக வால்பாறை நகர், சோலையாறுடேம், சின்கோனா, முடீஸ், அட்டகட்டி, கவர்க்கல் உள்ளிட்ட, 11 இடங்களில் டவர் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் நெட் ஒர்க் பிரச்னையால், வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வாடிக்கையாளர்கள் கூறியதாவது: வால்பாறை மலைப்பகுதியில் பி.எஸ்.என்.எல்., சேவையை தான் மக்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். ஆனால் மின் தடை ஏற்பட்டாலோ, லோசான மழை பெய்தாலோ சேவை பல மணி நேரம் துண்டிக்கப்படுகிறது.
மேலும் வாட்டர்பால்ஸ், ஐய்யர்பாடி, முடீஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏ.டி.எம்., இருந்தாலும் நெட் ஒர்க் பிரச்னையால் பணம் எடுக்க முடியாமல் வாடிக்கையாளர்கள் தவிக்கின்றனர்.
வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் அடிக்கடி பி.எஸ்.என்.எல்., சேவை துண்டிக்கப்படுவதை தடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிரந்தரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.