பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 16, 2026 11:24 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன்பாக நடந்தது. சங்க செயலாளர் பிரபாகரன் வரவேற்றார். நிர்வாகி சிவசாமி தலைமை வகித்தார். தமிழ் மாநில ஓய்வூதியர் சங்க உதவி தலைவர் நிஷார் அகமது, நிர்வாகி மதன் உட்பட பலர் பேசினர். நிர்வாகி ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில், ஜன. 1ம் தேதி முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும். மூன்று மாதத்துக்கு ஒரு முறை வழங்க வேண்டிய அகவிலைப்படி நிவாரணத்தை காலதாமதமின்றி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மத்திய அரசின் பஞ்சப்படி வழங்காமல் இழுத்தடிக்கும் போக்கினையும், பி.எஸ்.என்.எல். நிர்வாகத்தின் பரிந்துரைக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
