ADDED : ஜூலை 02, 2026 04:37 AM

அ நிறம் | அளவு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல்.இ.யூ., மற்றும் ஒருங்கிணைப்பு குழு சார்பில், தேசிய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஓய்வூதியர் சங்க கிளை செயலாளர் பிரபாகரன் தலைமை வகித்தார்.
மாவட்ட துணை தலைவர் நடராஜன், மாநில உதவி பொருளாளர் நிஷார் அக மது, கிளை செயலாளர் மதன் , விவசாய தொழி லாளர் சங்க நிர்வாகி மகாலிங்கம் பேசினர்.
அதில், புதிய பதவி உயர்வு கொள்கை வேண்டும். பி.எஸ்.என்.எல்., ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள், 30 சதவீதமாக உயர்த்த வேண்டும். அனைத்து கேடர்களுக்கு இலாகா தேர்வு நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
