/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.எஸ்.என்.எல்., 'சிக்னல்' பிரச்னை
/
பி.எஸ்.என்.எல்., 'சிக்னல்' பிரச்னை
ADDED : பிப் 13, 2025 09:55 PM
வால்பாறை ; வால்பாறையில் பி.எஸ்.என்.எல்., சார்பில், நகர் பகுதி, முடீஸ், காடம்பாறை, கவர்க்கல், சோலையாறுநகர் உள்ளிட்ட, 11 இடங்களில் செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், வால்பாறையில் பெரும்பாலான இடங்களில் செல்போன் சிக்னல் கிடைக்காததால், எஸ்டேட் தொழிலாளர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அவசரத்தேவைக்கு தொடர்பு கொள்ள முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், வால்பாறை அடுத்துள்ள, சக்தி - தலநார் எஸ்டேட் பன்னிமேடு, முடீஸ், சின்கோனா, அணலி, குரங்குமுடி, முருகன், சிவாகாப்பி, ஸ்ரீராம் உள்ளிட்ட எஸ்டேட்களில், பி.எஸ்.என்.எல்., சிக்னல் இல்லாததால், தொழிலாளர்கள் இருநாட்களாக அவதிப்படுகின்றனர். அவசரத்தேவைக்கு ஆம்புலன்ஸ்சைக்கூட அழைக்க முடியாத நிலை உள்ளது.
மக்கள் கூறுகையில், 'எஸ்டேட் பகுதியில், பி.எஸ்.என்.எல்., மொபைல்போன் சிக்னல் மிகவும் பலவீனமாக உள்ளது. இதனால், அவசரமான சூழ்நிலையில் மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தை கூட அழைக்க முடியாத நிலை உள்ளது.
ஆன்லைன் சேவைக்கு மாறி வரும் நிலையில், மொபைல்போன் பயன்பாடு இன்றியமையாததாகி விட்டது. இந்நிலையில், மொபைல்போன் இருந்தும் சிக்னல் இல்லாததால் பயன்படுத்த முடியாமல் தவிக்கிறோம். இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, எஸ்டேட் பகுதியில் கூடுதல் டவர் அமைக்க வேண்டும்,' என்றனர்.