/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.எஸ்.என்.எல்.,க்கு அதிக பாதிப்பு: சி.ஐ.டி.யு., மாநில தலைவர் கவலை
/
பி.எஸ்.என்.எல்.,க்கு அதிக பாதிப்பு: சி.ஐ.டி.யு., மாநில தலைவர் கவலை
பி.எஸ்.என்.எல்.,க்கு அதிக பாதிப்பு: சி.ஐ.டி.யு., மாநில தலைவர் கவலை
பி.எஸ்.என்.எல்.,க்கு அதிக பாதிப்பு: சி.ஐ.டி.யு., மாநில தலைவர் கவலை
ADDED : ஜூலை 23, 2025 09:43 PM

கோவை; பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்க, அகில இந்திய மாநாடு, கோவை வரதராஜபுரம் சாய் விவாகா மஹாலில் துவங்கியது. அகில இந்திய தலைவர் அனிமேஷ் மித்ரா தலைமை வகித்தார்.
மாநாட்டில், சி.ஐ.டி.யு., மாநில தலைவர் சவுந்தரராஜன் பேசியதாவது:
பொதுத்துறையில், அதிக பாதிப்புக்கு உள்ளான நிறுவனமாக பி.எஸ்.என்.எல்., இருக்கிறது. பி.எஸ்.என்.எல்., நிறுவனம் வெளிநாட்டில் இருந்து, 4ஜி க்கு தேவையான தொழில்நுட்பத்தை பெறக்கூடாது என்று தடுக்கின்றனர்.
தனியார் நிறுவனங்கள் எல்லாம், எங்கு வேண்டுமானாலும் போகலாம்; வரலாம். ஆனால், பி.எஸ்.என்.எல்., நிறுவனம், நவீன தொழில்நுட்பத்துக்கு குளோபல் டெண்டர் போகக்கூடாது என்கின்றனர்.
இவ்வாறு, அவர் பேசினார்.
முன்னாள் எம்.பி., நடராஜன், சி.ஐ.டி.யு., அகில இந்திய உதவி தலைவர் பத்மநாபன், பொதுச் செயலாளர் அபிமன்யு உட்பட பலர் பேசினர்.