sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பட்ஜெட் எதிர்பார்ப்பு; மில்கள் நெருக்கடியில் இருந்து மீளுமா? ஜவுளி துறைக்கு சலுகைகள் வழங்க வலியுறுத்தல்

/

பட்ஜெட் எதிர்பார்ப்பு; மில்கள் நெருக்கடியில் இருந்து மீளுமா? ஜவுளி துறைக்கு சலுகைகள் வழங்க வலியுறுத்தல்

பட்ஜெட் எதிர்பார்ப்பு; மில்கள் நெருக்கடியில் இருந்து மீளுமா? ஜவுளி துறைக்கு சலுகைகள் வழங்க வலியுறுத்தல்

பட்ஜெட் எதிர்பார்ப்பு; மில்கள் நெருக்கடியில் இருந்து மீளுமா? ஜவுளி துறைக்கு சலுகைகள் வழங்க வலியுறுத்தல்


ADDED : ஜன 29, 2025 08:51 PM

Google News

ADDED : ஜன 29, 2025 08:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்; ஸ்பின்னிங் மில்களை நெருக்கடியில் இருந்து மீட்க, மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா என மில் உரிமையாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கோவை புறநகரில் 3,000 ஸ்பின்டில் திறன் முதல், 50,000 ஸ்பின்டில் திறன் வரை உள்ள மில்கள் கரியாம்பாளையம், கணேசபுரம், குன்னத்தூர், பசூர், அ. மேட்டுப்பாளையம், பொங்கலூர் பகுதியில் உள்ளன.

விவசாயத்துக்கு அடுத்தபடி அதிக வேலை வாய்ப்பு தருவது ஸ்பின்னிங் துறை. எனினும் கடந்த சில மாதங்களாக இந்த தொழில் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதற்கு தீர்வாக மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா என்னும் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

இதுகுறித்து ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது:

வங்கியில் கடன் பெற்று, ஸ்பின்னிங் மில் இயக்கி வருகிறோம். ஆனால் பஞ்சுக்கு நிலையான விலை இல்லாதது. பருத்தி பற்றாக்குறை, தொழிலாளர்கள் சம்பள உயர்வு, அதிக மின் கட்டணம், இறக்குமதி பஞ்சுக்கு அதிக வரி விதிப்பு, வங்கிக் கடன் வட்டி அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த தொழில் நசிந்து வருகிறது. அன்னுார் தாலுகாவில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு தந்து வந்த ஸ்பின்னிங் மில்கள் தற்போது தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன. அன்னுார் தாலுகாவில் இயங்கி வந்த 80 மில்களில் தற்போது 50 மில்கள் மட்டுமே இயங்குகின்றன. ஸ்பின்னிங் மில்களில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் பலர் வெளி மாவட்டங்களுக்கும் வெளிமாநிலங்களுக்கும் வேலை தேடிச் சென்று விட்டனர். சில மில்கள் வங்கி கடனுக்காக சீல் வைக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு, பட்ஜெட்டில், மில்களை நெருக்கடியில் இருந்து மீட்க சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பஞ்சு, பருத்தி, செயற்கை பஞ்சு இறக்குமதிக்கு வரியை குறைக்க வேண்டும். நூல் ஏற்றுமதிக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். வங்கி கடனுக்கான வட்டியை குறைக்க வேண்டும். பல லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதால் வட்டி மானியம் வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

பருத்தி பயிரிடும் விவசாயிகளுக்கு அதிக ஊக்கம் அளித்து பருத்தியில் கூடுதல் விளைச்சல் தரும் ரகங்களை கண்டறிந்து பயிரிட செய்ய வேண்டும். அரசே பருத்தி பஞ்சு கொள்முதல் செய்து ஆண்டு முழுவதும் நிலையான விலையில் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நூல் விலை சரியாமல் இருக்க நிலையான ஏற்பாடு செய்ய வேண்டும்.

மத்திய பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்புகள் வெளியிட்டு உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மீண்டும் ஸ்பின்னிங் மில்கள் முழுமையாக இயங்கும். பல லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள்.

இவ்வாறு ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us