/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நவீன மருத்துவமனை வசதி ஏற்படுத்துங்க! தேயிலை தொழிலாளர்கள் கோரிக்கை
/
நவீன மருத்துவமனை வசதி ஏற்படுத்துங்க! தேயிலை தொழிலாளர்கள் கோரிக்கை
நவீன மருத்துவமனை வசதி ஏற்படுத்துங்க! தேயிலை தொழிலாளர்கள் கோரிக்கை
நவீன மருத்துவமனை வசதி ஏற்படுத்துங்க! தேயிலை தொழிலாளர்கள் கோரிக்கை
ADDED : ஜன 08, 2024 12:05 AM
வால்பாறை;வால்பாறை நகரில், எஸ்டேட் நிர்வாகத்தின் சார்பில், நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை கட்ட வேண்டும் என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை மலைப்பகுதியில்உள்ள, அரசு மருத்துவமனையில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லை. டாக்டர்கள் பற்றாக்குறையாலும், போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாததாலும், சிகிச்சைக்காக மருத்துவமனை செல்பவர்களை, பொள்ளாச்சி, கோவை அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்து அனுப்பப்படுகின்றனர்.
இதனால், நோயாளிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும், மேல்சிகிச்சைக்காக பொள்ளாச்சி, கோவை செல்லும் நோயாளிகள் செல்லும் வழியிலேயே உயிரிழக்க நேரிடுகிறது. இதனால், வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், வால்பாறை நகரில் அனைத்து வசதிகளுடன் நவீன மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பது தேயிலை தோட்ட தொழிலாளர்களின், 20 ஆண்டுகால எதிர்பார்ப்பாக உள்ளது.
தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கூறியதாவது: வால்பாறை மலைப்பகுதியில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பல்வேறு எஸ்டேட்களில் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில், தோட்ட அதிபர் சங்கத்தின் சார்பில் வால்பாறை நகரில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன மருத்துவமனை அமைக்க வேண்டும், என, கடந்த 2022ம் ஆண்டு, தொழிற்சங்கங்களின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
அதன்பின், மருத்துவமனை அமைப்பது குறித்து தொழிற்சங்க தலைவர்கள் யாரும் குரல் கொடுக்கவில்லை.
வனவிலங்குகள் அச்சுறுத்தலுக்கு இடையே பணிபுரியும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, தேயிலை தோட்ட அதிபர் சங்கத்தின் சார்பில் வால்பாறை நகரில் நவீன மருத்துவமனை வசதி ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.