தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பில்டு எக்ஸ்கான் 2.0 கட்டுமான கண்காட்சி: படம் விக்னேஷ்

பில்டு எக்ஸ்கான் 2.0 கட்டுமான கண்காட்சி: படம் விக்னேஷ்

பில்டு எக்ஸ்கான் 2.0 கட்டுமான கண்காட்சி: படம் விக்னேஷ்


ADDED : நவ 20, 2026 06:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2026 06:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: அனைத்து கட்டுமான பொருட்களின் கண்காட்சி பில்டு எக்ஸ்கான் 2.0 நேற்று கொடிசியா வளாகத்தில் துவங்கியது.

மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர் சங்கம் (காட்சியா) சார்பில் நடக்கும் இந்த கண்காட்சி காலை 10.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை நடக்கிறது. அனுமதி இலவசம்.

கண்காட்சி குறித்து காட்சியா தலைவர் ராமலிங்கம் கூறியதாவது:

காட்சியா சார்பில் இரண்டாவது முறையாக அனைத்து கட்டுமான பொருட்களுக்கான கண்காட்சியை நடத்துகிறோம். மணல், ஜல்லி, சிமென்ட் முதல் வீடுகட்ட தேவையான பொருட்கள், ரெடிமேட் கான்க்ரீட் வீடுகள், பிரி காஸ்ட் வீடுகள் உள்ளிட்ட பல நவீன தொழில்நுட்பங்களையும் காட்சிப்படுத்தியுள்ளோம். புதியதாக 3 டி பிரிண்டிங் முறையில் வீடுகளை அமைத்தல் தொழில்நுட்ப விளக்கம் இடம் பெற்றுள்ளது. பயோசெப்டிக் டேங்க், ரெடிமேட் செப்டிக் டேங்க் உள்ளிட்டவையும் உள்ளன. மண், தண்ணீர், கட்டுமான பொருட்களின் வலிமை போன்றவைகளும் இலவசமாக பரிசோதனை செய்து தரப்படுகிறது. காட்சியா உறுப்பினர்கள், இலவச கட்டுமான ஆலோசனைகளையும் வழங்குகின்றனர்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் துவக்கி வைத்தார். மித்ரன் ஸ்ட்ரக்சர்ஸ் நிர்வாக இயக்குனர் ஜெயகோபால், எம்.எல்.ஏ. சுகுமார், காட்சியா தலைவர் ராமலிங்கம், செயலாளர் மணிகண்டன்,பொருளாளர் கவிராஜ், பில்டு எக்ஸ்கான் கண்காட்சி தலைவர் தங்கவேல்,செயலாளர் திருமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இயற்கை மண் மையம் கட்டியுள்ள வீடு அனைவரையும் கவர்ந்தது. சிமென்ட் உபயோகிப்பதால் ஏற்படும் சுற்றுச் சுழல் பாதிப்பு, இந்த வீடுகளால் கணிசமான அளவு குறையும் என்கிறார் விஜயகுமார்.

அவர் மேலும் கூறுகையில்,” மண்ணை சேறாக்கி, உயர் அழுத்தத்தில் கல் ஆக மாற்றி பயன்படுத்தப்படுகிறது. 3 வித துளைகளை கொண்டுள்ள இந்த கல்லால் கட்டும்போது கான்கிரீட்டுக்கு இணையான வலிமையை தருகிறது. இந்த கற்களின் நடுவில் கம்பியை செலுத்தி மேலும் உறுதிப்படுத்த முடியும். சிமென்ட் பயன்பாடு இல்லாமல் வீடு கட்ட முடியும். கூரை அமைக்க மூங்கில்களை பயன்படுத்துகிறோம். இயற்கையான பொருட்களால் வீடு அமைப்பதால், இதை பசுமை வீடாக கருதலாம்,” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us