sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 'பில்ட் இன்டெக் - 2026' கண்காட்சி இன்று நிறைவு

/

 'பில்ட் இன்டெக் - 2026' கண்காட்சி இன்று நிறைவு

 'பில்ட் இன்டெக் - 2026' கண்காட்சி இன்று நிறைவு

 'பில்ட் இன்டெக் - 2026' கண்காட்சி இன்று நிறைவு


ADDED : பிப் 09, 2026 06:24 AM

Google News

ADDED : பிப் 09, 2026 06:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கொடிசியா தொழில் கண்காட்சி வளாகத்தில் நடந்து வரும் கட்டுமான பொருட்கள் கண்காட்சி, 'பில்ட் இன்டெக்-2026' இன்று நிறைவு பெறுகிறது.

காலை 10.00 முதல் மாலை 6.00 மணி வரை நடக்கும் கண்காட்சியில், பல்வேறு புதுமையான கண்டுபிடிப்புகள், கட்டட கட்டுமான தொழில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து விளக்கும் அரங்குகள் இடம் பெற்றுள்ளன.

ரெடிமேடு தொட்டிகள், செப்டிக் டேங்க், பயோசெப்டிக் டேங்க், கழிவுநீர் கால்வாய், சிமென்ட் சிலேப், தரைத்தளம் அமைக்க பிளாக்குகள் கவர்ந்து வருகின்றன. சிமென்ட் தரைகளுக்கான பெயின்ட், கெமிக்கல்கள் தண்ணீர் புகாமல் பாதுகாக்கும் ரசாயனங்களும் இடம் பெற்றுள்ளன.

செங்கல்லுக்கு மாற்றாக பிளாக்குகளில் எளிதாக வீடு கட்ட முடியும். இவற்றுக்கான பெயின்ட், பட்டி செலவுகள், ஆட்களுக்கான சம்பளம், கட்டுமானத்துக்கான கால அளவு போன்றவை கணிசமாக குறையும்.

குடிநீர் முதல் கழிவுநீர் வரை சுத்திகரிப்பு இயந்திரங்கள் உள்ளன. பெங்களூருவை சேர்ந்த ஒரு நிறுவனம், அபார்ட்மென்ட், தொழிற்சாலைகளுக்கு தண்ணீரை சுத்திகரிக்கும் நிலையத்தை அமைத்து தருகிறது. 99 சதவீதம் துாய்மையாக்கப்படும் நீரை மீண்டும் ஒரு முறை பயன்படுத்தலாம். ரெடிமேடு காம்பவுண்ட், கம்பி, பிளாஸ்டிக் வலைகளும் இடம் பெற்றுள்ளன. வீடு கட்ட விரும்புவோர், தற்போது வந்துள்ள முன்னேற்றங்களை அறிய இக்கண்காட்சி உதவும்.






      Dinamalar
      Follow us