ADDED : நவ 22, 2026 06:43 PM
அ நிறம் | அளவு
கோவை: கோவை மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர் சங்கத்தின் (காட்சியா ) சார்பில், நடந்தா பில்ட் எக்ஸ்கான் 2.0 கண்காட்சி இன்று (நவ.,22) நிறைவுற்றது.
கொடிசியா தொழில் வர்த்தக கண்காட்சி மையத்தில் நடந்த மூன்று நாள் கண்காட்சியில், கட்டுமான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. புதிய தொழில்நுட்பங்கள், புதிய வரவுகள், புதிய கட்டுமான பொருட்கள், புதுமையான ஆலோசனைகள், வீடு கட்ட இலவச ஆலோசனை, இலவசமாக மண், தண்ணீர், கான்கிரீட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. பொதுமக்கள் பார்வையிட்டு பயன் பெற்றனர்.
