தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/க்ரைம் கார்னர்

க்ரைம் கார்னர்

க்ரைம் கார்னர்


UPDATED : நவ 22, 2026 06:44 PM

ADDED : நவ 22, 2026 06:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 22, 2026 06:44 PM ADDED : நவ 22, 2026 06:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்காதல் விவகாரத்தில் அடிதடி

செல்வபுரம்: திண்டுக்கல் சந்தோஷ் 28, செல்வபுரத்தில் தங்கி கூலி வேலை செய்கிறார். அதே பகுதியில் உள்ள திருமணமான பெண்ணுடன், மிஸ்டு கால் மூலம் பழக்கமாகி கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இது அக்கம் பக்கத்தினருக்கு பிடிக்கவில்லை. அப்சல் 23, சூர்யா 28, கண்மணி 23 ஆகிய 3 பேர் சந்தோஷுடன் மது குடித்தனர். அப்போது கள்ளத்தொடர்பை கைவிட சொல்லி சந்தோஷை தாக்கி காயப்படுத்தினர். சந்தோஷ் புகாரில் செல்வபுரம் போலீசார் கண்மணியை கைது செய்தனர். தப்பி சென்ற அப்சல், சூர்யாவை தேடுகிறார்கள்.

97 கிராம் தங்கம் திருட்டு

டவுன்ஹால்: கவுண்டம்பாளையம் பிரசாந்த் 43, தெலுங்கு வீதியில் நகைப்பட்டறை வைத்துள்ளார். மேற்கு வங்கத்தை சேர்ந்த சைஃபுல் மண்டல் 30, ஒன்றரை மாதமாக பட்டறையில் வேலை பார்த்து வந்தார். நகை செய்வதற்காக வைத்திருந்த 97 கிராம் தங்கத்தை திருடி சென்றுவிட்டார். இதன் மதிப்பு ரூ.2,45,000. வெரைட்டிஹால் போலீசில் பிரசாந்த் புகார் அளித்துள்ளார். வழக்கு பதிந்து சைஃபுலை தேடி வருகிறார்கள்.

குட்கா விற்றவர் கைது

ரத்தினபுரி: புதுக்கோட்டை சிவானந்தம் 43, கிராஸ்கட் ரோடு 7வது வீதியில் குட்கா விற்றார். அவரை ரத்தினபுரி போலீசார் கைது செய்தனர். அவரிடம் 1,185 குட்கா பாக்கெட்டுகள் (மொத்தம் 7.5 கிலோ) பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல கவுண்டம்பாளையத்தில் மோனிஸ்வரன், செல்வபுரத்தில் கலைமணி, சிங்காநல்லூரில் ராஜபாண்டி ஆகியோர் குட்கா விற்றதற்காக கைது செய்யப்பட்டனர்.

பொது இடத்தில் மது குடித்தவர்கள் மீது வழக்கு

கோவை: பொது இடங்களில் மது குடிப்போர் மீது வழக்கு பதியப்படுகிறது. பெரியகடை வீதி, காட்டூர், சாய்பாபாகாலனி, துடியலூர், கரும்புக்கடை, குனியமுத்தூர், பீளமேடு, சரவணம்பட்டி பகுதியில் பொது இடத்தில் மது குடித்த 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us