/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பில்டர்ஸ் அசோசியேஷன் விருது வழங்கும் விழா
/
பில்டர்ஸ் அசோசியேஷன் விருது வழங்கும் விழா
ADDED : செப் 27, 2025 12:46 AM

கோவை; பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா சார்பில், இன்ஜினியர் தினம் மற்றும் ஆறாவது சாதாரண கூட்டம், கோவையில் நடந்தது.
டிசைன் போரம் இந்தியா நிறுவன தலைவர் ரகுநாதன், தர்மலிங்கம் அசோசியேட்ஸ் ஆர்க்கிடெக்ட் தர்மலிங்கம் ஆகியோருக்கு, சிறந்த இன்ஜினியர்களுக்கான விருது வழங்கப்பட்டது.
டிசைன் போரம் இந்தியா நிறுவனத் தலைவர் ரகுநாதன் பேசுகையில், ''கட்டடங்களை மக்களுக்கு பயனுள்ளதாக மாற்றக்கூடிய திறன், கட்டுமான துறையினரிடம் உள்ளது. கட்டுமானத்துறை வருங்காலத்தில் சந்திக்கக் கூடிய பிரச்னைகளை யோசிக்க வேண்டும். குறிப்பாக, வேலைக்கு ஆட்கள் கிடைக்காதது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. இயந்திரமயமாக்கல் உள்ளிட்ட மாற்று சக்திகளை செயல்படுத்த வேண்டும்,'' என்றார்.
முன்னதாக, பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா தலைவர் ஜோசப் வரவேற்றார். செயலாளர் ரங்கநாதன், பொருளாளர் சத்யராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.